Saturday 19 March 2016

World sparrow Day 20.03.2016





"விட்டு விடுதலையாகிப் பறப்பாய் அந்த சிட்டுக்குருவியைப் போலே! "-  பாரதி தன் வரிகளில் விடுதலையை சிட்டுக் குருவியின் சுதந்திர உணர்வால் வெளிப்படுத்துகிறார். அத்தகு சிட்டுகுருவி அரிதான ஒரு இனமாக மாறி வருகிறது. முன்பெல்லாம் சிட்டுக்குருவி அண்டி வாழும் வீடு அதிர்ஷ்டத்தின் வாயில்  என்று கருதப்பட்டது. அதனால் குருவிகளுக்கு அடைக்கலம் அநேகம் இருந்தது. இன்றோ அடுத்த வீட்டு மனிதன் யார் என்றே தெரிந்து கொள்ள விருப்பப்படாதவர்களாக நாம் மாறி வருகிறோம். இதில் குருவியைப் பற்றி நாம் கவலைபடுவதே இல்லை.

குருவிகள் இன்மை நம் இயற்கை, சுற்றுச் சூழல் ஆகியன மலடாகி வருகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

சேமிப்பிற்கு குருவியை உதாரணமாகக் கூறுவர். ஆனால் இன்றோ குருவியைச் சேமிக்கும் அவசியத்திற்கு நாம் ஆட்பட்டுள்ளோம்.


 களைந்து போன, காணாமல் போன நம் குருவிகளுக்கு  கூடு கட்ட வசதி செய்வோம். குருவி இனத்தைக் காக்க  முயற்சியைத் தொடங்குவோம்.


Happy Sparrow day!  Let's spare our sparrows!
 




  



No comments:

Post a Comment