Tuesday 12 May 2015

International Nurses Day - Birth anniversary of Florence Nightingale

                       International Nurses Day is celebrated on 12 May every year to remember the contribution of nurses in our day to day life 

            The day marks the birth anniversary of Florence Nightingale, who is known as the founder of modern nursing. The day has been celebrated since 1965.

The theme for this year's Nurses Day is           

"Nurses: A Force for Change: Care Effective, Cost Effective".


கைவிளக்கேந்திய காரிகையார்

நைட்டிங்கேல் பிறந்த தினம்

                               இங்கிலாந்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் 12.05.1820–ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். செவிலியர் சேவையைத் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கினார். அவர் பிறந்த மே 12–ந் தேதியே உலக செவிலியர் தினமாகும்.

உணர்வுப்பூர்வமான தருணம்

                                  1853-56 கால கட்டங்களில் நடைபெற்ற கிரிமியன் போரில் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகளுக்கிடையில் தான் உலகமே நைட்டிங்கேலை திரும்பிப் பார்த்தது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போர்க்களத்தில் காயம்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ராணுவ வீரர்களை இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தவர்களை கையில் ராந்தல் விளக்கை எடுத்துக் கொண்டுச் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறி தேவையான மருந்துகளை வழங்கி அவர்களைத் தேற்றி, அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, அவர்தம் குடும்பத்தினருக்குத் தெரிவித்து அவர்களது கவலைகளைப் போக்கி விரைந்து குணமடைய செய்தார்.இவர் சிறந்த புள்ளியில் வல்லுநரும் கூட,.
                                      பிளாரன்ஸ் நைட்டிங்கேல் மனித குலத்திற்கு சேவை செய்வதையே லட்சியமாக கொண்டிருந்தார். அதற்காக ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு சென்று செவிலியர் படிப்பு முடித்தார். ”சுகாதாரமான மருத்துவ மேலாண்மை”, ”நோயாளிகள் பராமரிப்பு”, ”சேவையில் கவனம்” ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இங்கிலாந்தில் செவிலியர் பயிற்சிப் பள்ளியை தொடங்கினார். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையான வாழ்வையே தேர்ந்தெடுத்தார். 1856-ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு அவரது சேவையைப் பாராட்டி ”ஆர்டர் ஆஃப் மெரிட்” மற்றும் ”ஃபிரிடம் ஆஃப் தி சிட்டி ஆஃப் லண்டன்” போன்ற விருதுகளை வழங்கி கௌரவித்தது.  
                                      பிளாரன்ஸ் நைட்டிங்கேல் மறைவிற்குப் பின்பு அவரது தன்னலமற்ற பணியை நினைவுக்கூற ஆண்டுதோறும் மே 12–ந்தேதி லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் செவிலியர்களால் அந்த மாளிகையில் உள்ள விளக்குக்கு ஒளி ஏற்றி அந்நாளில் அங்கு வருகை தரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு அந்த மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு உன்னதமான உணர்வுப்பூர்வமான தருணமாகும்.

TO STUDY ABOUT FLORENCE NIGHTINGALE  CLICK HERE

Happy Nurses Day particularly to the nurses who care with dare even the communicative diseases 


No comments:

Post a Comment