Showing posts with label Pride of India. Show all posts
Showing posts with label Pride of India. Show all posts

Friday, 18 September 2015

First Women won medal in Olympics - Karnam Malleswari


Karanm Malleswari becomes the first Indian women to win an Olympic medal (bronze) at the Sydney Olympics ( 19th september 2000).At the Sydney 2000 Olympic Games, weightlifter Karnam Malleswari marked her place in Olympic and Indian sports history. As she lifted 110 kg in the “snatch” and 130 kg in the “clean and jerk” for a total of 240 kg, she took the bronze medal and became India’s first woman to win an Olympic medal.

Thursday, 17 September 2015

M S Subbulakshmi

1916ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மதுரையில் பிறந்தவர் எம்.எஸ். அவரது முழுப் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. இவரதுபெற்றோர் சுப்ரமணிய அய்யர், சண்முக வடிவு அம்மாள். சுப்ரமணிய அய்யர் வழக்கறிஞர், சண்முகவடிவு அம்மாள் சிறந்த வீணை இசைக்கலைஞர். தாயாரிடம் இருந்த இசை ஞானம் எம்.எஸ்ஸுக்கும், அவரது சகோதரர் சக்திவேல், சகோதரி வடிவாம்பாள் ஆகியோருக்கும் கிடைத்தது.எம்.எஸ். வாய்ப்பாட்டில் கவனம் செலுத்தினார், சக்திவேல் மிருதங்கக் கலைஞர் ஆனார், வடிவாம்பாள் தாயார் வழியில் வீணைக் கலைஞர்ஆனார். தாயிடமிருந்து இசையை கற்றுக் கொண்ட அவர் 10 வயதில் எச்.எம்.வி. நிறுவனத்திற்காக பாடி சாதனை படைத்தார். தாயைத் தவிர மதுரைசீனிவாச அய்யர், மாயவரம் வி.வி.கிருஷ்ணஅய்யர் மற்றும் புகழ் பெற்ற கர்நாடக இசைப் பாடகர் செம்மங்குடி சீனிவாசய்யர்ஆகியோரும் எம்.எஸ்ஸுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த குருக்கள். 13 வயதாக இருக்கும்போது தாயார் செல்லும் கச்சேரிகளுக்கெல்லாம் எம்.எஸ்ஸும் உடன் செல்ல ஆரம்பித்தார். 4 வருடங்கள் கழித்துஅதாவது 17வது வயதில் சென்னை மியூசிக் அகாடமியில் அவர் தனது வாய்ப்பாட்டு அரங்கேற்றத்தை நிகழ்த்தினார். அன்றே பல நூறுரசிகர்களையும் பெற்றார். அதன் பின்னர் எம்.எஸ்.உயரே போகத் தொடங்கினார். அவரது குரல் வசீகரத்தால் ஈர்க்கப்பட்ட திரையுலக பிரம்மா என்று அழைக்கப்படும்இயக்குநர் கே.சுப்ரமணியம் (நடன கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) எம்.எஸ்ஸை திரையுலகுக்கு அழைத்து வந்து படங்களில்நடிக்க வைத்தார். அவர் நடித்த முதல் படம் சேவாசதன். அதன் பின்னர் 4 படங்களில் எம்.எஸ். நடித்தார். அதில் அதிகம் பிரபலமடைந்தபடம் மீரா. மீராவில் எம்.எஸ். பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை இன்றும் கூட கேட்டவுடன் மனதைக் கரைக்கும் வகையில் அமைந்தவை.எம்.எஸ்.ஸுக்கும் அவரது கணவர் சதாசிவத்திற்கும் 1940ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின், கணவர் சதாசிவத்தின்வழிகாட்டுதலில் எம்.எஸ். மிகப் பெரிய உயரத்தை எட்டினார். சதாசிவம் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். அவர் தனது மனைவி எம்.எஸ். உடன் காந்திஜியை சந்தித்தார். அதன்பின்பு கஸ்தூரிபாய் நினைவுஅறக்கட்டளைக்காக எம்.எஸ். 5 இசை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார். எம்.எஸ்ஸின் திறமைகளை செம்மையாக செதுக்கி அவரை புகழின் உச்சத்திற்கே கொண்டு சென்றார் சதாசிவம். நான் பெற்றவெற்றிகளுக்கெல்லாம், புகழுக்கெல்லாம், பரிசுகளுக்கெல்லாம் எனது கணவர்தான் முழுக் காரணம் என்று எம்.எஸ்ஸே பல முறைபெருமையுடன் கூறியுள்ளார். 1997ல் சதாசிவம் மரணமடைந்தார். அன்று முதல் எம்.எஸ். கச்சேரிகள் செய்வதை விட்டு விட்டார். வீட்டிலேயே முடங்கி விட்டார்.கணவரின் நினைவுகளுடன் அவர் வாழ்ந்து வந்தார். கர்நாடக இசையின் ராணியாக கோலோச்சி வந்த எம்.எஸ். பெறாத பட்டங்களோ, பரிசுகளோ கிடையாது எனக் கூறும் வகையில்அத்தனை உயர் பரிசுகளையும், பட்டங்களையும் பெற்று விட்டார் எம்.எஸ்.1974ல் மக்சேசே விருதைப் பெற்றார் எம்.எஸ். 1954ல் பத்மபூஷன் விருதைப் பெற்றார். மியூசிக் அகாடமி வழங்கும் சங்கீத கலாநிதி பட்டத்தை 1968ல் பெற்றார். இந்த விருதைப் பெற்றமுதல் பெண்மணி எம்.எஸ்.தான். 1966ல் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து, தனது வசீகர குரலால் சபையில் கூடியிருந்தவர்களைக் கட்டிப்போட்டார். அதோடு மறைந்த காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதிய பாடல்களையும், மறைந்த முதல்வர் ராஜாஜி உலக அமைதிக்காகஎழுதிய பாடல்களையும் எம்.எஸ்.தான் பாடினார். இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாடி கர்நாடக இசையின் பெருமையை உலகம் உணரச் செய்தார். இவற்றுக்கெல்லாம் உச்சமாக 1998ல் இந்தியாவின் உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்றார் எம்.எஸ். இத்தனை பெருமைகளை உடையவராக இருந்தும் எம்.எஸ். சுப்புலட்சுமி மிகுந்த அடக்கமுடையவராக இருந்தார். இசை என்பது ஒரு கடல்.நான் ஒரு மாணவி என்று கூறினார். எம்.எஸ்ஸின் பாட்டுத் திறமையை காலங்கள் கடந்தும் நினைவூட்டும் வகையில் மீரா பஜன்கள், வெங்கடேச சுப்ரபாதம், குறையொன்றும்இல்லை, காற்றினிலே வரும் கீதம் ஆகிய பாடல்கள் வெளிப்படுத்தும். மகாத்மா காந்தியின் விருப்பப் பாடலான வைஷ்வணவ ஜனதோபாடலையும் எம்.எஸ். குரல் இன்னும் தூக்கிக் கொடுத்து இன்றும் பிரபலமான பாடலாக விளங்கி வருகிறது. 88 வயதில் இசைக் குயில் எம்.எஸ். மறைந்தாலும் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அவரது இசைக் குரல் மறையாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை

source from : http://tamil.oneindia.com/news/2004/12/12/history.html

Tuesday, 15 September 2015

அறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று

அறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று (செப்டம்பர் 15 1909)
ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச்

சென்று உரையாற்றினார்.  நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற,
மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில்
நேருவேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்கள எனக் கேட்டார். அப்போது அங்கிருந்தபள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய
பேச்சை மொழிபெயர்த்தான்.
அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் 
அண்ணா!
அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் யேல் பல்கலைக்கழகத்திற்குச்
சென்றிருந்தார். அப்போது அங்குள்ளமாணவர்களிடம் உரையாடினார்.
உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும்
வல்லவர் என்று தெரியும். ஆங்கிலஎழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய
நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற
முடியுமா?' எனக் கேட்டார்.உடனடியாக விடையளித்தார் அறிஞர்
அண்ணா. வியப்பாக இருக்கிறதாஒன்று முதல் தொண்ணூற்று ஒன்பது வரையிலான எண்களை ஆங்கிலத்தில் சொன்னார்
அவர். நூற்றை ஆங்கிலத்தில்சொன்னால் அதில் ’D’ என்னும்
எழுத்து வந்து விடும் என எல்லோரும் எதிர்பார்த்திருந்த போது 'STOP' எனக்
கூறி நிறைவு செய்தார்ஒருமுறை அறிஞர் அண்ணாவிடம்
'பிகாசு'(Because) என்னும் ஆங்கிலச்சொல் மூன்றுமுறை வருமாறு ஓர் ஆங்கிலச் சொற்றொடர் கூறுமாறு கேட்டார்கள்உடனடியாக அண்ணா சொன்னார் - “No
sentence ends with because because
‘Because’ is a conjunction”.
இதற்கும் மேல் அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் ஓர் தமிழ்
தேசியவாதி , தமிழ் அறிஞர். 

Friday, 11 September 2015

மகாகவி பாரதியின் நினைவு நாள் - செப்டெம்பர் 11


"காலா உனை சிறு புல்லென மதிக்கிறேன் வாடா!",  என காலனையே வீரத்துடன் எதிர்கொண்ட மகாகவி பாரதியின் நினைவுநாள்!
Bharathi with his hands on wife çhellamma, the young girl sitting next to chllamma Baratis younger daughter Sakuntala. The girl standing is Baratis first daughter  Thangamma already married and the young man next to her is her husband! The other man's identity is not clear May be a family friend

அவர் நினைவைப் போற்றுவோம்! 

Saturday, 25 July 2015

கார்கில் போர் வெற்றி தினம் இன்று


கார்கில் போர் வெற்றி தினம் இன்று


                      இந்தியாவின் ஜம்மு காஷ்மிர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கார்கில், திரஸ் பகுதியின் மலைச் சிகரங்கள், படாலிக் மற்றம் சோர்பாட்லா போன்ற பகுதிகளில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் கூட்டாக ஒன்று சேர்ந்து 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊடுருவினர். ஜம்மு காஷ்மிர் மாநில எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் சில இடங்களில் குளிர் காலத்தின் போது சில மாதங்களுக்கு இரு நாடுகளின் தரப்பிலும் எல்லைப் பாதுகாப்பு படை தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படும். பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் அந்த சமயத்தை பயன்படுத்தி இந்திய எல்லையைச் சேர்ந்த சிகரங்களை ஆக்கிரமித்தனர். இந்திய ராணுவம் ”ஆப்பரேஷன் விஜய்” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை எடுத்தது. மலை முகடுகள் மற்றும் சிகரங்களில் போர் நடந்ததால் இந்திய ராணுவத்திற்கு படைத்தளவாடங்களைக் கொண்டு செல்ல கடினமாக இருந்தது. “ஸ்ரீநகர்“ மற்றும் “லே“ பகுதியை இணைக்கும் NH-1D தேசிய நெடுஞ்சாலையை மிகவும் உயரமான பகுதிகளிலிருந்து பாகிஸ்தான் படையினர் தாக்கினர். இந்தியப் படையினர் முன்னேறிச் செல்வது பெரும் சவாலாக இருந்தது. இந்திய வான் படை மே மாதம் 26-ல், MIG-21, MIG-27, MI-17 போர் விமானங்கள் மூலமாக சிகரங்களின் உச்சியில் பதுங்கியிருந்த பாகிஸ்தான் படையினரை தாக்கியது. இந்திய ராணுவம் ஜூன் 29-ல் டைகர் ஹில்ஸ் மலைப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள பாய்ண்ட் 5060 மற்றும் 5100 மலைச் சிகரங்களை கைப்பற்றியது. ஜூலை 4-ல் முக்கிய சிகரமான டைகர் ஹில்சை தொடர்ச்சியாக 11 மணி நேரத் தாக்குதலுக்குப்பின் மீட்டது இந்திய ராணுவம். இரண்டு மாதமாக நடந்தப் போரில், இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டு பாகிஸ்தான் படையினரை முழுமையாக இந்திய எல்லையிலிருந்து விரட்டியடித்தனர். ஜூலை-26 போர் முடிவுற்றது. இந்நாளினை “கார்கில் வெற்றி தினமாக“ நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை நீத்த ராணுவத்தினர் ஒவ்வொருவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(ஜூலை-26) இந்திய அரசு கார்கில் தினத்தை அனுசரிக்கிறது.