Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label வாழ்த்துக்கள். Show all posts

Tuesday, 11 August 2015

சர்வதேச இளைஞர் தினம் - August 12



ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டவும், அவர்களை நெறிப்படுத்தி நாட்டினை வளர்ச்சிப் பாதையில் இயங்க வைக்கவும் ஒவ்வொரு நாடும் இதே நாளில்(ஆகஸ்ட்-12) சர்வதேச இளைஞர் தினத்தை கொண்டாடுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ல் சர்வதேச இளைஞர் தினம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி 2000-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-இல் இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நாட்டுப்பற்று மிக்க இளைஞர்கள் வெயில், குளிர் என்று பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடனும், இளமைத்துடிப்புடனும் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையுடன் விளங்கும் இளைஞர்கள்தான் ஒரு நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள்.
















Source : https://www.facebook.com/yenipathipagam

Friday, 17 July 2015

17.07.2015 - World Day for International Justice

Image result for justice day
World Day for International Justice, also referred to as Day of International Criminal Justice or International Justice Day is celebrated throughout the world on July 17 as part of an effort to recognize the emerging system of international criminal justice. July 17 was chosen because it is the anniversary of the adoption of the Rome Statute, the treaty that created the International Criminal Court. On 1 June 2010, at the Review Conference of the Rome Statute held in Kampala (Uganda), the Assembly of State Parties decided to celebrate 17 July as the Day of International Criminal Justice. 

Each year, people around the world use this day to host events to promote international criminal justice, especially support for the International Criminal Court. The day has been successful enough to attract international news attention, and for groups to use the day to focus attention on particular issues such as genocide in Darfur, Falun Dafa, and serious crimes of violence against women. 


Note : The International Court of Justice (French: Cour internationale de justice; commonly referred to as the World Court or ICJ) is the primary judicial branch of the United Nations. It is based in the Peace Palace in The Hague, Netherlands.

Wednesday, 15 July 2015

கர்ம வீரர் காமராஜர்

article by Teachers

கர்ம வீரர் காமராஜர்

                                                  கர்ம வீரர்  காமராஜர்

                           
                                   முழங்கால்  தொடும்  உன்  கைகள் !
                                               
                                               உன்  கொள்கையைப்  பற்றினால்

                                    வான் தொடும்  எங்கள்  கைகள் !

                                                 கருமேகமோ  உன்  முகம்

                                       கறைபடிய  வில்லை  உந்தன்  குணம் !

                                                    சோறு  போட்டு  தந்தாய்  கல்வி

                                      சோர்வதில்லை  தோல்வி கண்டு  நீ  தல்லி !

                                                       கர்ம  வீரர்  காமராஜர்   நீ

                                          என்றும்   தோல்வி  அடைய   பேரரசர் !                        

                                                                                                                          ரா . சந்தியா
                                                                                                                                 X - அ                                       

கர்ம வீரர் காமராஜர்

Article by S.Ajay

கர்ம வீரர் காமராஜர்

விருதுப்பட்டியில் முளைத்த  விதையாய்
வெடித்துச்  சிதறிய மண்ணில்
வேரூன்றிய திங்கள் மகனாய்

எளிமையில் பிறந்து வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவுக்  கூட்டைத்  தாண்டி

உழைப்பின் நாயகனாய்
உண்மைத்  தோழனாய் நாடே வீடு
நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க

அறவழிப் போரும் மதுக்  கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறைப்  பட்ட சிங்கமாய்

ஏழைப்  பங்காளராய்
 ஏழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்னை
விதைத்த அறிவுப் பெட்டகமே

நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய்  காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி

அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமென்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க

காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரைவழி கடல் வழி
சாலையில்  தன்  உயிர்
வழி தந்த ஆட்சியில்

அணையா      விளக்காய்
அமைதியின்   சொருபமாய்
உறங்குகிறாய்  நம் அன்னை மடியில்......!!!


                                                                                                                  சி.பொன்செல்வி
                                                                                                                   12th -B..


கர்ம வீரர் காமராஜர்

அரச  குடும்பத்தில்  பிறக்கவில்லையென்றாலும்  அரசாண்டவர் ,

 விருதுநகரிலே  பிறந்து - பல விருதுகளை  வாங்கிக் குவித்தவர்,

படித்துப்  பட்டம்  பெறவில்லை - ஆனால்  எண்ணில்லடங்காப் பட்டங்களுக்குச் சொந்தகாரர் ,
உள்நாட்டை  அதிகம்  நேசித்ததாலோ - அவரின் பெயரில் சென்னை  உள்  நாட்டு  விமான நிலையம்!
கஞ்சிக்  குடிக்க வழியில்லையென்றாலும் - பல மொழிகளைக் கரைத்துக்   குடித்தவர்.
கர்மமே  தனது  குறிக்கோள்  எனப்  போராடியதால்  அவர் கர்மவீரர் ,
               ''ராசா''   சிறுவயதில் தாயார்  அன்பாக  அழைத்தது,
               ''ராஜா''  பெருவயத்தில்  மக்கள்  அன்பாக அழைத்தது .

பிறந்த  குலமோ  நாடார், அதற்கேற்ப  எதையும்  நாடவில்லை,
     அவர்,    தீ யென - யாரையும்  நாடார்,
                     என்றும் - சிறுமைகள்  நாடார் ,
                     வாழ்வில் - மாயங்கள்  நாடார் ,
                     வெற்று  - மந்திரங்கள்  நாடார் ,
                     வரட்டு  - வார்த்தைகள்  நாடார் ,

வாழ்க்கைப்   பாதையோ ,
                          ஒன்றே  மணம் ,
                          ஒன்றே  எண்ணம் ,
                          ஊருக்கே  வாழ்ந்த  வாழ்கை,
                          திருமணம்  அறியாதவர் , பருவம், காதல், பாசம் - மறந்து,
                          சீராட்டிப் , பாராட்டிய  தாய்  தவிர சொந்தம் என்று  சொல்ல                                               யாருமில்லை , துணையிருக்க  மங்கையுமில்லை ,
                          மணிமண்டபங்கள்  தோட்டங்கள்  ஏதுமில்லை ,
                          பொதுவாழ்விலோ  நேர்மை , தூய்மை .
                          தனக்கு கிடைக்காத  கல்வி  தமிழ்நாட்டுப்
                          பிள்ளைகளுக்குக்   கிடைக்க  ஊர்  ஊராய்  பள்ளிகள் .


               ஏதுமறியாதவன் ஆடுகிறான் ,
               எல்லாம் அறிந்தவன் அடங்கிக் கிடக்கிறான், என்பதற்கு
               எடுத்துக் காட்டாய்   விளங்கியவர்  காமராசர்
           
               இல்லாமை  இல்லாத  சமுதாயத்தை  உருவாக்கி
               மக்கள் மனதில் என்றும்  வாழ்பவர்  காமராசர்.



                                                                                                       பி.வெ .கணேஷ் .
                                                                                                         12th - B.


                                                                                                             
                         




கர்ம வீரர் காமராஜர்

வெள்ளைக் கதருக்குள்
கருப்பாய் ஒரு
பச்சைத் தமிழன்!

நீ கல்விச் சாலையில் கற்றதோ
கை மண்ணளவு! - ஆனால்
கல்விச் சாதனையில்
கடந்ததோ  கடலளவு!

விருது நகரின் விழுது!
வெள்ளந்தி மனது!

நீ சம்சாரக் கடலில்
மூழ்காத கட்டை பிரம்மசாரி!

 பந்தமும் இல்லை!  -  உன்னிடம்
பந்தாவும் இல்லை!

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்! - ஆனால்
ஏட்டுச் சுரைக்கய்களுக்கு
வேட்டானவன்!

பல அணைகளைப்
பரிசாகத் த்தந்தவன்! - பல
பாலங்கள் கட்டத் தானே
பாலமாய் இருந்தவன்!

அறம் பேசிய உன் வாய்
புறம் பேசியதில்லை!
அடுக்கு மொழி அறியா உன் நாக்கு - என்றும்
தடம் புரண்டதில்லை!

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும் தான்!
வாழ்க்கையில் இல்லை!

நீ
செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்த்தே ஈய்ந்தவன் !
சமூக நீதிக்கே சருக்காய்த் தேய்ந்தவன்!

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது !
உனக்கு
வாரிச் சுருட்டவும்  தெரியாது!

நீ
விடியலுக்கு வித்து!
விண்ணுக்கு சொத்து!

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத கையேடு!

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை!
அதனால் தானோ என்னவோ
உம்மைத் தோற்கடிக்க நாங்கள்
இன்னமும் தலை நிமிரவே இல்லை!

             மோ.தாரணி                                                     
பனிரெண்டாம் வகுப்பு - ஆ பிரிவு                             
எஸ்.ஆர்.எம் நைட்டிங்கள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி.
சென்னை - 600 033                                           



கர்மவீரர் காமராஜர் பிறந்த தினம் - இன்று

உன் பெயரோ காமராஜ் !
நீயோ தமிழ் நாட்டின் சாம்ராட்!
கருணையில் நீ ஒரு புத்தர் - உன்
தொலைநோக்கிலோ நீ ஒரு சித்தர்!
முன்னேற்றம் பலவிற்கும்  நீயே காரணகர்த்தர்.
ஏழை மனக்குறிப்பறியும் நல வித்தகர்  
நீ பிறந்ததோ ஜூலை பதினைந்து
சேவைகள் பல செய்தாய் மனமுவந்து!
உன் சேவைகளை நினைந்து
உன் மேல் பாட வந்தேன் சிந்து!
மக்கள் நலன் பல விழைந்து
அவரின் துயர் பல கலைந்து
வெளியிட்டாய் பல ஜி.ஒ.
பட்டறிவால் அறிந்தாய் Geo
அதனால் உண்டானது பல அணை
கடவுள்போல் மக்களுக்கானாய் துணை!
ஐம்பூதங்களிலும் உன் ஆட்சி!
விண்ணைத் தாண்டும் உன் மாட்சி!
நீரை அடக்கினாய் அணையினால்!
மின் சக்தி பெற வைத்தாய் அனலினால்!
காற்றில் கலந்த சுகந்தமானாய்  !
நிலத்திலடங்கினாலும் விண்ணுக்கு ஒப்பானாய்!
வாழ்த்த வேண்டிய அவசியமில்லை!
தன்னால் வளர்கிறது உன் புகழ்!
நெஞ்சம் நிமிர்ந்திடத் திகழ்!
என்றென்னை வாழ்த்திட வேண்டும் உன் இதழ்!
உன் வழியில் என்றும் நாங்கள்
வளர்ந்து வாழ்ந்திட வேண்டும் பல காலங்கள்!
வாழ்த்துவாய் எம்மை!
வளர்த்துவோம் உம் பெருமை!
சொல்லிலடங்கா உன் சேவைகளை
பட்டியலிட முயன்று
முடியாததால் முடிக்கின்றேன் நான் முத்தாரம்!





Wednesday, 1 July 2015

தேசிய மருத்துவர் தினம் இன்று


                                     டாக்டர்களின் தன்னலமற்ற சேவையினைப் போற்றும் விதமாகவும், டாக்டர் பி.சி ராயின் அர்ப்பணிப்பு உணர்வு, பொதுச் சேவை, ஈகை குணம் ஆகியவற்றின் நினைவாகவும் அவரின் பிறந்த நாளான இன்று நம் நாட்டில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்படுகிறது. ராய் பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பாங்கிபோர் எனும் ஊரில் 1882-ஆம் ஆண்டு ஜூலை 1-இல் பிறந்தார். கொல்கத்தாவில் மருத்துவப் பட்டம் பெற்று லண்டனில் MRCP மற்றும் FRCS படிப்பை முடித்து இந்தியாவிற்குத் திரும்பி ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்தார். அந்நாட்களில் நடந்த காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1948-ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலமைச்சர் பணியிலிருந்தாலும் தன் மருத்துவ சேவையினை தொடர்ந்து செய்து வந்தார். 1961-ஆம் ஆண்டு இவரது மருத்துவ சேவையைப் பாராட்டி இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத் ரத்னா விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. இந்தியாவின் மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இருப்பினும் அரசுப் பொது மருத்துவ மனைகளிலும், மருத்துவ முகாம்கள் அமைத்தும், அவ்வப்போது பரவும் நோய்களைப் பற்றி விழிப்புணர்வு செய்வதுடன் நேரம் கருதாது மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றும் மருத்துவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் ஆவர்.



 நன்றி : -  https://www.facebook.com/yenipathipagam

Friday, 12 June 2015

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின நாள் - கொண்டாடுவதற்கு அல்ல வழக்கத்திற்கு கொண்டு வர!

கல்வி எமது முதல் உரிமை! - அதைக் 
களவாடுதல் தகுமோ?

கனிவாய் எமது வாழ்வாதாரம் 
கனிந்திட உதவிடுவீர்! 

குழந்தைத் தொழிலுடைமை - நம் 
குடிமையியலுக்கு சாபக்கேடு!

பரிகாரம் என்ற ஒன்றுண்டேல் - அது 
பள்ளிப் படிப்பு ஒன்றேயாம்!

ஒன்றுபடுவீர்! குழந்தைத் 
தொழிலாளர் முறை ஒழிப்பீர்! 

குழந்தைத் தொழிலாளர் இல்லாத இந்தியா வளமான இந்தியா! - 
அதனால் வல்லரசாகும் இந்தியா!

இந்த   எதிர்ப்பு    தின      நாள்
கொண்டா டுவதற்கு   அல்ல
வழக்கத்திற்கு கொண்டு வர!

ஜெய் ஹிந்த்! ! !

                 ஒரு குழந்தைத் தொழிலாளியின் மனக்குமுறல்!

Monday, 8 June 2015

இன்று உலகக் கடல் நாள்: ஜூன் 8

                    உலகக் கடல் நாள் (World Ocean Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8  அன்று அனுசரிக்கபடுகிறது. நம் பூமியின் பெரும்பகுதியை வியாபித்துள்ளகடல், நமது பூமிக்கு இதயம் போன்றது. நம் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை செலுத்துவதுபோல்,நாம் வாழும் பூமியின் நிலப்பகுதிக்கு, கடல்தான் மழையாய்ப்பொழிந்து செழிக்கசெய்கிறது.  

                    பூமியில் நாம் வாழ கடல்,பெரும்பங்குவகிக்கிறது கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும்,பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே அமைந்துள்ளது. கடல், ஒவ்வொரு ஆண்டும் பலமில்லியன் கணக்கான மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்யும், ஆக்சிஜன் உற்பத்திசெய்யவும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்கள் வழங்குகிறது, மற்றும் காலநிலை மாற்றங்களை சீராக்குகிறது! சில சமூகதினரின் வாழ்வாதாரம் கடலைசார்ந்தே அமைந்துள்ளது எதிர்கால தலைமுறையினர் சுகாதார மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, கடல் நம் வாழ்வாதாரத்திற்கான பெரும்பகுதியை தன்னகத்தே வைத்துள்ளது.

                      கடல் நீரைக் குடிக்க இயலாது. ஆனால் நாம் ஒருவகையில் கடல் நீரைத்தான் குடிக்கின்றோம். கடல் நீர் மேகமாகி, மேகம் மழையாகி , மழை நிலத்தடி நீராகிறது. அந்நண்ணீரே நமது வாழ்வாதாரம். அவ்வாழ்வாதாரத்தின் மூலாதாரம் கடல். நாம் ஆற்றில் தூக்கி எரியும் E-Waste , plastic Garbage ஆகியன கடலை மாசுபடுத்துவதோடு கடல் வாழ் உயிரினங்களையும் அழித்து வருகிறது. நாம் வாழ வகை செய்யும் கடலுக்கு நாம் செய்யும் நன்மை என்ன?

Please do Recycle, Reuse, and Reduce 

Thursday, 4 June 2015

World Environment day

world environment day


   WORLD ENVIRONMENT DAY            

               If we're destroying our trees and destroying our environment and hurting animals and hurting one another and all that stuff, there's got to be a very powerful energy to fight that. I think we need more love in the world. We need more kindness, more compassion, more joy, more laughter. I definitely want to contribute to that.
                    Ellen DeGeneres

               A true conservationist is a man who knows that the world is not given by his fathers, but borrowed from his children.
John James Audubon
It’s time! Once again UNEP seeks to make the biggest global call and mobilization for action on 5 June, World Environment Day (WED). 

The theme for 2015 is how the well-being of humanity, the environment and economies ultimately depends on the responsible management of the planet’s natural resources. Evidence is building that people are consuming far more natural resources than what the planet can sustainably provide.

Many of the Earth’s ecosystems are nearing critical tipping points of depletion or irreversible change, pushed by high population growth and economic development. By 2050, if current consumption and production patterns remain the same and with a rising population expected to reach 9.6 billion, we will need three planets to sustain our way of life. Living well within planetary boundaries is the most promising strategy for ensuring a healthy future.

Saturday, 30 May 2015

Let Us Say No to Tobacco

World No Tobacco Day (WNTD) is observed around the world every year on May 31. It is intended to encourage a 24-hour period of abstinence from all forms of tobacco consumption around the globe. The day is further intended to draw attention to the widespread prevalence of tobacco use and to negativehealth effects, which currently lead to nearly 6 million deaths each year worldwide, including 600,000 of which are the result of non-smokers being exposed to second-hand smoke.[1] The member states of the World Health Organization (WHO) created World No Tobacco Day in 1987. In the past twenty years, the day has been met with both enthusiasm and resistance around the globe from governments, public health organizations, smokers, growers, and the tobacco industry.
 

altபுகை புடிப்பது ஒரு வாந்தி எடுப்பதற்கு சமம் ஒரு பொருள் நம் உடலில் சென்று விட்டு வெளியே வந்தால் அதுக்கு பெயர் கழிவு எப்படி நம் உடலுக்கு சென்று விட்டு வெளியே வரும் உணவை நாம் மறு படி உண்பது இல்லை, அதை போல் தான் வெளியே வரும் புகையும் ஒரு கழிவு.

ஆனால் புகை பிடித்து வெளியே விடுவார் அதை மீண்டும் அவர் சுவாசிப்பார்...அவர் பக்கத்தில் இருப்பவரும் அதை சுவாசிக்க வேண்டும்  அவர்கள் வெளியே விடும் புகை மற்றவர்கள் சுவாசிப்பதால் அவர்களுக்கும் கெடுதல் வீட்டில் குழந்தை இருக்கும் அப்படியே இவர்களும் புகை பிடிப்பார்கள்...நான் தான் புகை புடிக்கின்றேன் குழந்தைக்கு எதுவும் ஆகாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை சிறு வயதில் இருந்தே இந்த புகை உடலுக்கு சென்றால் எதிர் காலத்தில் மிக கொடிய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது..

                                                                  
புகைபிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள், அது உண்மையிலேயே உடல்நலத்துக்கு எதிரி என்பதை நன்கு அறிந்துகொண்டிருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். புகை பிடிக்காமல் இருந்தும் நோய்வாய்ப்பட்டு இறந்த பலரை அவர்கள் பொதுவாக உதாரணம் காட்டுவார்கள்.அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள்

புகை பிடித்தல் என்பதொரு நடைமுறைப் பழக்கம். அதில் ஒரு பொருளாக மிகப் பெரும்பாலும் புகையிலை எரிக்கப்பட்டு அதன் புகை சுவைக்க அல்லது உள்ளிழுக்கப்படுகிறது. இது முதன்மையாக மனம் மகிழ்விக்கும் போதைப் பயன்பாட்டினை நிர்வகிக்கும் வழிமுறையாக நடைமுறையிலுள்ளது. அப்போது எரிதலுக்குள்ளாகும் பொருள் போதைப் பொருளிலுள்ள நிகோடின் போன்ற சுறுசுறுப்பான பொருட்களை வெளியிடுகிறது. அவற்றை நுரையீரல் வழியாக உறிஞ்சப்பட்டு கிடைக்கச் செய்கிறது.

                                                                      
altசிகரெட்டிற்காக ஒரு பெரும்தொகையினை, புகை பிடிப்பவர்கள் அவர்களை அறியாமலே செலவிடுகின்றனர். அதாவது, காசு கொடுத்து, உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்கின்றனர். தாம் பாடுபட்டு வேலை செய்த பணத்தைத் தம் உடம்பைக் கெடுத்துக் கொள்ளப் பயன்படுத்துவதை விடப்பெரிய அறிவீனம் ஏதும் உண்டா?
மாசில்லா காற்றை சுவாசிப்பது மனிதருக்கான பிறப்புரிமை, அது புகைபிடிக்கும் சிறு பான்மையினரால் பறிக்கப்படுவது வருந்தத்தக்கது.
புகை பிடித்தலின் தீமைகளும், அதை விலக்கும், தவிர்க்கும் முறைகளும்
அனைவருக்கும் தெரிந்திருந்தும் அது குறித்த விழிப்புணர்வை பல வேளைகளில்
இளைய தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்துவதில்லை

புகை உயிரைக் கெடுக்கும் அடுத்தவனையும் கெடுக்கும்!
சிகரெட் பிடிப்பதில் இவ்வளவு நன்மைகள் இருப்பதை கருத்தில் கொண்டு புகை பிடிப்பவர்கள் யாரும் இனி யாரைக் கண் டும் சங்கோஜப்படத் தேவையில்லை. நாம் எக்கேடு கெட்டாலும் பிறருக்கு உதவுகிறோமே நிம்மதியுடன் தொடருங்கள் சேவையை.
ஒரு சிறுகதை - http://www.thenkoodu.in/manage_blogs.php?blogid=14104&url=asiyaomar.blogspot.com/2012/01/blog-post_25.html

Monday, 25 May 2015

World Thyroid Day

World Thyroid Day (WTD), May 25th, is dedicated to thyroid patients and to all who are committed to the study and treatment of thyroid diseases worldwide. 

Thyroid Day brings attention to the importance of awareness of symptoms and solutions of thyroid disorders. 

Without realising, symptoms you are experiencing, could be a result of an underlying thyroid disorder. 

1 in 7 will suffer with some form of thyroid disorder, with 5 of the 7 being Women! 

If you are unsure, speak to your doctor and request thyroid pathology and a thyroid ultrasound to be sure.



இன்றைய வரலாறு
உலக தைராய்டு தினம் இன்று
மனிதனின் கழுத்துப்பகுதியில் அமைந்திருக்கும் தைராய்டு சுரப்பி, நாளமிள்ளா சுரப்பிகளின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போது உடலின் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுகிறது. தைராக்ஸின் ஹார்மோனை உற்பத்தி செய்யும் இந்தச் சுரப்பி உடலின் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் முக்கிய சுரப்பியாகும். உடல் சோர்வு, மறதி, உடல் எடை குறைதல் அல்லது கூடுதல், தசைகள் பலம் குறைதல், தூக்கமின்மை படபடப்பு, எரிச்சல் போன்றவை தைராய்டு சுரப்பி பாதிக்கப்பட்டுள்ளதன் அறிகுறியாகும். உடலில் அயோடின் சத்து குறைவாக இருந்தாலும் இந்நோய் ஏற்படுகிறது. தைராய்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தைராய்டு சர்வதேச கூட்டமைப்பு 2007-ஆம் ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் மே-25-ஆம் நாளினை உலக தைராய்டு தினமாக அறிவித்து அனுசரித்து வருகிறது.