உலகக் கடல் நாள் (World Ocean Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 அன்று அனுசரிக்கபடுகிறது. நம் பூமியின் பெரும்பகுதியை
வியாபித்துள்ளகடல், நமது பூமிக்கு இதயம் போன்றது. நம் உடலின்
ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தை செலுத்துவதுபோல்,நாம் வாழும் பூமியின் நிலப்பகுதிக்கு, கடல்தான் மழையாய்ப்பொழிந்து செழிக்கசெய்கிறது.
பூமியில் நாம் வாழ கடல்,பெரும்பங்குவகிக்கிறது கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும்,பலநாடுகளின் போக்குவரத்து கடல்மார்க்கமாகவே அமைந்துள்ளது. கடல், ஒவ்வொரு ஆண்டும் பலமில்லியன் கணக்கான மக்களின் உணவுத்தேவையை பூர்த்திசெய்யும், ஆக்சிஜன் உற்பத்திசெய்யவும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்கள் வழங்குகிறது, மற்றும் காலநிலை மாற்றங்களை சீராக்குகிறது! சில சமூகதினரின் வாழ்வாதாரம் கடலைசார்ந்தே அமைந்துள்ளது எதிர்கால தலைமுறையினர் சுகாதார மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யும் பொருட்டு, கடல் நம் வாழ்வாதாரத்திற்கான பெரும்பகுதியை தன்னகத்தே வைத்துள்ளது.
கடல் நீரைக் குடிக்க
இயலாது. ஆனால் நாம் ஒருவகையில் கடல் நீரைத்தான் குடிக்கின்றோம். கடல் நீர்
மேகமாகி, மேகம் மழையாகி , மழை நிலத்தடி நீராகிறது. அந்நண்ணீரே நமது வாழ்வாதாரம்.
அவ்வாழ்வாதாரத்தின் மூலாதாரம் கடல். நாம் ஆற்றில் தூக்கி எரியும் E-Waste
, plastic Garbage ஆகியன கடலை மாசுபடுத்துவதோடு கடல் வாழ் உயிரினங்களையும் அழித்து வருகிறது.
நாம் வாழ வகை செய்யும் கடலுக்கு நாம் செய்யும் நன்மை என்ன?
Please
do Recycle, Reuse, and Reduce
No comments:
Post a Comment