Monday, 8 June 2015

இன்றைய வரலாறு (08.06.2015)


                                                                              உலக ப்ரைன் டியூமர்(Brain Tumour) தினம் இன்று மனிதனின் மூளையில் உருவாகும் அபரிமிதமான செல்களின் வளர்ச்சியால் மூளையில் டியூமர் ஏற்படுகிறது. உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் இந்நோயை ஆரம்பத்தில் கண்டறிந்தால் தற்போது உள்ள நவீன அறுவை சிகிச்சையின் மூலமாக எளிதாக அகற்றி விடுகின்றனர்.     


                                                                             இந்தியாவில் மும்பையில் செயல்படும் Brain Tumour Foundation தொண்டு நிறுவனம் ப்ரைன் டியூமரால் பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், சேவைகள், பரிசோதனைக்கான செலவுகள், ப்ரைன் டியூமரால் பாதிக்கப்பட்டவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் தேவையான மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கான உதவிகளை குடும்ப பொருளாதார சூழலைப் பொறுத்து நோயால் பாதிக்கப்பட்டவரின் மறு வாழ்விற்காக வழங்கி வருகிறது. இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் (ஜூன்-8) ப்ரைன் ட்யூமர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

    நன்றி : -  https://www.facebook.com/yenipathipagam

No comments:

Post a Comment