அரச குடும்பத்தில் பிறக்கவில்லையென்றாலும் அரசாண்டவர் ,
விருதுநகரிலே பிறந்து - பல விருதுகளை வாங்கிக் குவித்தவர்,
படித்துப் பட்டம் பெறவில்லை - ஆனால் எண்ணில்லடங்காப் பட்டங்களுக்குச் சொந்தகாரர் ,
உள்நாட்டை அதிகம் நேசித்ததாலோ - அவரின் பெயரில் சென்னை உள் நாட்டு விமான நிலையம்!
கஞ்சிக் குடிக்க வழியில்லையென்றாலும் - பல மொழிகளைக் கரைத்துக் குடித்தவர்.
கர்மமே தனது குறிக்கோள் எனப் போராடியதால் அவர் கர்மவீரர் ,
''ராசா'' சிறுவயதில் தாயார் அன்பாக அழைத்தது,
''ராஜா'' பெருவயத்தில் மக்கள் அன்பாக அழைத்தது .
பிறந்த குலமோ நாடார், அதற்கேற்ப எதையும் நாடவில்லை,
அவர், தீ யென - யாரையும் நாடார்,
என்றும் - சிறுமைகள் நாடார் ,
வாழ்வில் - மாயங்கள் நாடார் ,
வெற்று - மந்திரங்கள் நாடார் ,
வரட்டு - வார்த்தைகள் நாடார் ,
வாழ்க்கைப் பாதையோ ,
ஒன்றே மணம் ,
ஒன்றே எண்ணம் ,
ஊருக்கே வாழ்ந்த வாழ்கை,
திருமணம் அறியாதவர் , பருவம், காதல், பாசம் - மறந்து,
சீராட்டிப் , பாராட்டிய தாய் தவிர சொந்தம் என்று சொல்ல யாருமில்லை , துணையிருக்க மங்கையுமில்லை ,
மணிமண்டபங்கள் தோட்டங்கள் ஏதுமில்லை ,
பொதுவாழ்விலோ நேர்மை , தூய்மை .
தனக்கு கிடைக்காத கல்வி தமிழ்நாட்டுப்
பிள்ளைகளுக்குக் கிடைக்க ஊர் ஊராய் பள்ளிகள் .
ஏதுமறியாதவன் ஆடுகிறான் ,
எல்லாம் அறிந்தவன் அடங்கிக் கிடக்கிறான், என்பதற்கு
எடுத்துக் காட்டாய் விளங்கியவர் காமராசர்
இல்லாமை இல்லாத சமுதாயத்தை உருவாக்கி
மக்கள் மனதில் என்றும் வாழ்பவர் காமராசர்.
பி.வெ .கணேஷ் .
12th - B.

No comments:
Post a Comment