ஒரு நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டவும், அவர்களை நெறிப்படுத்தி நாட்டினை வளர்ச்சிப் பாதையில் இயங்க வைக்கவும் ஒவ்வொரு நாடும் இதே நாளில்(ஆகஸ்ட்-12) சர்வதேச இளைஞர் தினத்தை கொண்டாடுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1999-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ல் சர்வதேச இளைஞர் தினம் கொண்டாட தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி 2000-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-இல் இளைஞர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நாட்டுப்பற்று மிக்க இளைஞர்கள் வெயில், குளிர் என்று பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடனும், இளமைத்துடிப்புடனும் எதிர்காலத்தைப் பற்றிய தெளிவான சிந்தனை மற்றும் தன்னம்பிக்கையுடன் விளங்கும் இளைஞர்கள்தான் ஒரு நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கிறார்கள்.
Source : https://www.facebook.com/yenipathipagam
No comments:
Post a Comment