அன்று பெய்த மழையில் அரும்பாடுபட்டு
ஆடிப் பட்டம் தேடி விதைத்து
இனிய பொங்கலன்று விளைச்சலை இன்பத்தோடு
ஈன்றெடுத்த பிள்ளைகளுடன் ஈசன் அருள் நாடி
உறவுகள் கூடி உள்ளபடி உழவனை,
ஊனையும் உயிரையும் காக்கும் இயற்கையை
எண்ணத்தால் கோல வண்ணத்தால் வணங்க
ஏலக்காய் மணத்துடன் பச்சரிசிப் பால் பொங்கி
ஐயன் அருணனுக்கும் வருணனுக்கும் நன்றி பாராட்ட
ஒரு முத்தான வாய்ப்பு ! கொண்டாடுவோம்
ஓங்கி வளர்ந்த கரும்பு, மஞ்சளோடு !
அஃதே எமது விருப்பும் வாழ்த்தும்!
உழவில்லாமல் உணவில்லை! உணவில்லாமல் உயிரில்லை!
உழவால் உயர்! உழவே உயிர்!
உயிரைக் காப்போம் பாரம்பரியத்துடன்!
உழவை வணங்குவோம்! உழவனுக்குத் தோள் கொடுப்போம்!
உழவர் தினத்தில் பள்ளி மாணவ மாணவியருக்கும்
அவரது பெற்றோருக்கும், பள்ளி வளாக அலுவலர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும் நைட்டிங்கேல் பள்ளி என்றும் இன்பம் தங்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்வெய்துகிறது!
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment