National Defence Day
இரண்டாம் உலக யுத்தத்தின்போது கிழக்கு ஆப்ரிக்காவிடமிருந்து சூடான் நாடு விடுதலை அடைவதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைத்தியாகம் செய்தனர் . இதற்க்காக சூடான் அரசு லட்சம் பவுண்ட்ஸ் பணத்தை இந்திய கவர்னர் ஜெனரல் லார்டு லின்லித்கொவ் (Lord Linlithgow) என்பவரிடம் வழங்கியது. அப்பணத்தைக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே அருகே கதக்வாஸ்லா (Khadakwasla) என்னுமிடத்தில் இந்திய ராணுவ வீரர்கள் தியாகங்களை அங்கீகாரம் செய்யும் வகையில் ஒரு நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. மேலும் இவ்விடத்தில் தேசிய பாதுகாப்புக் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைக்கும் ராணுவ பயிற்சி அளிக்கபடுகிறது. உயர்த் தியாகம் செய்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு தினம் மார்ச் 3,1972 இல் அறிவிக்கப்பட்டது .
No comments:
Post a Comment