Friday, 22 May 2015

சர்வதேச பல்லுயிர் தின வாழ்த்துக்கள்

YENI - ஏணி's photo.


                  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலகின் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து சர்வதேச பல்லுயிர் தினத்தை இன்றைய நாளில்(மே-22) கொண்டாடி வருகிறது. கடந்த நூற்றாண்டில் அனைத்து துறைகளிலிலும் ஏற்பட்ட அறிவியலின் அபரிமிதமான வளர்ச்சியால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் நில மற்றும் நீர் வாழ் உயிரினங்கள், காட்டில் வாழும் பல் வகை உயிரினங்கள் என உலகின் அனைத்து உயிர் வாழ்விகளுக்கும் அச்சுறுத்தலாகவும், பல இனங்கள் அழியும் நிலையிலும் உள்ளன. தொழிற்சாலை மாசு மற்றும் கழிவுகள், மறுசுழற்சி செய்ய இயலாத எலக்ட்ரானிக் குப்பைகள், மட்காத பாலித்தின் பைகள், செயற்கை சாயக்கழிவுகள், மருத்துவக் கழிவுகள் என்று உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் புவி வெப்ப மண்டல வாயுவின் சராசரி வெப்ப அளவு விகிதம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் புவியின் துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இன்னும் 100 வருடங்களில் புவியின் சில பகுதிகள் கடலில் மூழ்கி பல உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது, கடலில் சேரும் கழிவுகளினால் கடல் வாழ் உயிரினங்கள் சிலவும் மறைந்து வருகின்றன. ஆகையால் சர்வதேச பல்லுயிர் தினமான இன்று நாம் ஒவ்வொருவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதியேற்போம்.
நன்றி :-     
 YENI - ஏணி

No comments:

Post a Comment