Saturday, 9 May 2015

அன்னைக்கு சமர்ப்பணம் - அன்னையர் தின வாழ்த்துக்கள் !!!

அம்மா 

அரக்கனும் கடவுளாகிறான் தன்                                                             
தாயின் இரத்தத்தைப்    பாலாக   பருகையிலே....


குருடனும்   ஓவியம்   படைக்கிறான்   தன்                                                                    
தாயின்    முகத்தை   நினைக்கையிலே.... 


பாலைவனத்திலும்    ரோஜா    முளைக்கும்    தன்
தாயின்    மடியில்    படுத்துறங்கையிலே.... 


ஊமையும்கூட   பலகுரலில்     பேசுகிறான்  தன்
தாயை   அம்மா    வென்றழைக்கையிலே..... 


பட்டாம்பூச்சியும்    பட்டம்      பெருகிறது   தன்
தாய்      தன்னை     பாராட்டுகையிலே....
.


பிச்சைக்காரனும்     பில்கேட்ஸ்    ஆகிறான்   தன்
தாயிடம்     வாங்கிய    ஒருரூபாயிலே.....


பிணமும்கூட    கருவறை   செல்கிறது  தன்
தாயின்    அன்பு    மடித்தேடி......



வாழ்க தாய்மை!      
வளர்க நம் மனத்தூய்மை!!     
மேலும் உய்க நம் பெருமை!!! 



அன்னைக்கு சமர்ப்பணம்  - 
அன்னையர் தின வாழ்த்துக்கள் !!!


சுதன்             
X --STD    -  2014-15


No comments:

Post a Comment