Thursday, 31 December 2015

SRM Nightingale wishes our staff, students and their parents A Happy and Prosperus new year

பொலிவான புத்தாண்டே வருக!
போற்றும்படி நீயும் வருக! - எம்மை 
பல்கலை வித்தகராய் உருமாற்ற வருக!
பாரதி கனவை நனவாக்க வருக!
பிள்ளைக் கனிகளை  அமுதாக்க வருக!
பீடுடையோராய் நடப்பிக்க வருக!
புத்தகங்களை மதிப்பிக்க வருக!
பூஞ்சோலையாய் வாழ்வை வளர்விக்க வருக!
பெண்களைக் கண்களாய் கவனிக்க வருக! ஊரார்
பேர் சொல்ல பெருமைப் படுத்த வருக!
பைந்தமிழ் உலகாள வருக!
பொலிவான புத்தாண்டே வருக!
போற்றும்படி நீயும் வருக! - எம்மை
பௌதிகம் உணர்ந்த நம்மாழ்வாராக்க வருக!

No comments:

Post a Comment