Sunday 25 October 2015

25.10.2015 - Right To Information Day - தகவல் பெரும் உரிமைச் சட்ட நாள்

தகவல் பெரும் உரிமைச் சட்டம் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!
அரசு, அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டம் பொருந்தாது. இன்று மக்களிடம் இச்சட்டம் பரவலாக சென்று சேர்ந்துள்ளது. ஏராளமான அதிர்ச்சியூட்டும், வியக்கவைக்கும் தகவல்கள் இதன் மூலம் பெறப்பட்டுள்ளன. யார் வேண்டுமானாலும் தகவல் பெறலாம். இச்சட்டம் ஜனநாயகத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

No comments:

Post a Comment