2015 Theme: The Power of the Adolescent Girl: Vision for 2030


உலக பெண் குழந்தைகள் தினம்
இன்றைய நவீன உலகிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுக்கப்படுவது அநீதி. பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011 டிசம்பர் 19 ஆம் தேதி அய்.நா, சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல் என்பது இந்தாண்டு இத்தினத்தின் மய்யக் கருத்து.
உலகில் அனைத்துப் பெண் குழந்தை களுக்கும் கட்டாயம் கல்வி வழங்கவேண்டும் என அய்.நா., வலியுறுத்துகிறது. பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் மூலம், அவர்கள் மட்டுமல்லாமல் சமூகமும் முன்னேறும். இருபது ஆண்டுகளுக்கு முன், பெண் குழந்தைகளுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இன்று ஓரளவுக்கு மாணவிகளுக்கும் கல்வி வாய்ப்பு வழங்கப்படு கிறது.
இருப்பினும் இன்றும் சில நாடுகளில் பெண் குழந்தைகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. அவர்கள் பள்ளி செல் வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இதற்கு வருமானம், பாதுகாப்பு, கலாச்சாரம், கல்வி நிறுவனம் ஆகியவை காரணம்.
பெண் குழந்தைகள் அதிகளவில் கல்வி பெறுவதற்கு, அனைத்து நாடுகளும் நட வடிக்கை எடுக்கவேண்டும் என அய்.நா., வலியுறுத்துகிறது.
பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல் வதற்குத் தேவையான, போக்குவரத்து வசதி களை ஏற்படுத்துதல். படிக்கும் குழந்தை களுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை வழங்குதல்.
பெண் குழந்தைகளுக்கும் தொழில்நுட்ப கல்வி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். படிப்பை முடிக்கும் மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளித்தல்.
பாலின சமத்துவத்தை வலியுறுத்துவது, குழந்தை திருமணத்தை அறவே ஒழிப்பது, குடும்பங்களில் மாணவர்களுக்கு சமமாக மாணவிகளுக்கும் அனைத்து சலுகைகள் வழங்குதல்.
தொழில்நுட்ப கல்வி, கிராமப்புற மாணவி களுக்கும் கிடைப்பதை உறுதி செய்தல்.

பெண் குழந்தைகளை மதிக்க உறுதிமொழி: * என் சக பெண்களை நல்ல தோழியர்களாகக் கொள்வேன். * என் சக தோழியர்களைக் கண்ணியமாக நடத்துவேன். * என் தாய்க்கும், சகோதரிக்கும் கொடுக்கும் அனைத்து மரியாதைகளையும் பெண்களுக்குக் கொடுப்பேன். * எந்தச் சூழலிலும் கண்ணியக் குறைவாக பெண்களிடம் நடந்து கொள்ள மாட்டேன். * பெண்களுக்கு எதிரான எந்தவிதமான வன்முறையிலும் ஒருக்காலும் ஈடுபடமாட்டேன். * பெண்களை நுகர்வுப் பொருளாக நடத்த மாட்டேன். * பெண்களின் உணர்வுகளை மதிப்பேன். * பெண்மையைப் போற்றுவேன். * மானுடத்திற்கான சமத்துவத்தைக் கடைப்பிடிப்பேன். * இன்று நான் ஏற்கும் இந்த உறுதிமொழியை என் வாழ்நாள் முழுவதும் காப்பேன்.
All sources collected from Internet
No comments:
Post a Comment