NATIONAL AIR FORCE DAY (08.10.2015)
இந்திய வான் எல்லையை பாதுகாக்கவும், போரின் போது எதிரி நாடுகளின் மீது விரைவாக தாக்குதல் நடத்தவும், தரைப்படையினர் முன்னேறிச் செல்வதற்கு ஆதரவாக தாக்குதல் தொடுப்பதற்கும், உலகின் நான்காவது பெரிய வான் படையாக இந்திய வான் படை இருக்கிறது. 1932-ஆம் ஆண்டு அக்டோபர் 8-ல் தொடங்கப்பட்டது. அதன் பெருமையை உணர்த்தும் வகையில், இந்திய வான் படை தினம் கொண்டாடப்படுகிறது. ஆப்பரேசன் விஜய், மெக்தூத், காக்டஸ் போன்ற வெற்றிகரமான ஆப்பரேசன்களை மேற்கொண்டுள்ளது. அண்டை நாட்டுடனான போரின்போது வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தது. இயற்கை சீற்றங்களின் போது உயிர்களைக் காப்பதில் சிறந்த மீட்புப் படையாகத் திகழ்கிறது. இதன் தலைவராக இந்திய குடியரசுத் தலைவர் உள்ளார். தற்போதைய ஏர் சீஃப் மார்ஷலாக அருப் ராஹா இருக்கிறார்.
No comments:
Post a Comment