Wednesday, 15 July 2015

கர்ம வீரர் காமராஜர்

வெள்ளைக் கதருக்குள்
கருப்பாய் ஒரு
பச்சைத் தமிழன்!

நீ கல்விச் சாலையில் கற்றதோ
கை மண்ணளவு! - ஆனால்
கல்விச் சாதனையில்
கடந்ததோ  கடலளவு!

விருது நகரின் விழுது!
வெள்ளந்தி மனது!

நீ சம்சாரக் கடலில்
மூழ்காத கட்டை பிரம்மசாரி!

 பந்தமும் இல்லை!  -  உன்னிடம்
பந்தாவும் இல்லை!

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்! - ஆனால்
ஏட்டுச் சுரைக்கய்களுக்கு
வேட்டானவன்!

பல அணைகளைப்
பரிசாகத் த்தந்தவன்! - பல
பாலங்கள் கட்டத் தானே
பாலமாய் இருந்தவன்!

அறம் பேசிய உன் வாய்
புறம் பேசியதில்லை!
அடுக்கு மொழி அறியா உன் நாக்கு - என்றும்
தடம் புரண்டதில்லை!

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும் தான்!
வாழ்க்கையில் இல்லை!

நீ
செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்த்தே ஈய்ந்தவன் !
சமூக நீதிக்கே சருக்காய்த் தேய்ந்தவன்!

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது !
உனக்கு
வாரிச் சுருட்டவும்  தெரியாது!

நீ
விடியலுக்கு வித்து!
விண்ணுக்கு சொத்து!

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத கையேடு!

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை!
அதனால் தானோ என்னவோ
உம்மைத் தோற்கடிக்க நாங்கள்
இன்னமும் தலை நிமிரவே இல்லை!

             மோ.தாரணி                                                     
பனிரெண்டாம் வகுப்பு - ஆ பிரிவு                             
எஸ்.ஆர்.எம் நைட்டிங்கள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி.
சென்னை - 600 033                                           



No comments:

Post a Comment