Wednesday, 15 July 2015

கர்ம வீரர் காமராஜர்

விருதுப்பட்டியில் முளைத்த  விதையாய்
வெடித்துச்  சிதறிய மண்ணில்
வேரூன்றிய திங்கள் மகனாய்

எளிமையில் பிறந்து வறுமையில்
பயின்ற கல்வியை ஆறாம்
படை வீட்டில் தடைபட்ட
அறிவுக்  கூட்டைத்  தாண்டி

உழைப்பின் நாயகனாய்
உண்மைத்  தோழனாய் நாடே வீடு
நம் தேசமே குடும்பம் என்று
ஆங்கிலேய அன்பர்களை அறவே ஒழிக்க

அறவழிப் போரும் மதுக்  கடை
மறியலும் தீண்டாமை ஒழிப்பும்
ஒத்துழையாமை இயக்கமும்
நடந்த போரில் தாமும் கலந்து
சிறைப்  பட்ட சிங்கமாய்

ஏழைப்  பங்காளராய்
 ஏழை மாணவர்களுக்கு
விடியும் கல்விக் கண்னை
விதைத்த அறிவுப் பெட்டகமே

நீ படிக்காத மேதையாய்
இருந்தும் பஞ்சம் பசி தீர்த்த
கர்ம வீரராய்  காலம் வைத்த பெயரில்
கருப்பு காந்தியாய் மாறி

அணைகள் பல கட்டி
அகிலம் செழிக்க மனைகள் தோறும்
மண்ணில் கலந்த சிமென்டாய் மாறி
நலமும் வளமும் சிறக்க

காகித ஆலைகள் கட்டி
மக்கள் வளம் உயர
தரைவழி கடல் வழி
சாலையில்  தன்  உயிர்
வழி தந்த ஆட்சியில்

அணையா      விளக்காய்
அமைதியின்   சொருபமாய்
உறங்குகிறாய்  நம் அன்னை மடியில்......!!!


                                                                                                                  சி.பொன்செல்வி
                                                                                                                   12th -B..


No comments:

Post a Comment