Sunday 12 July 2015

World Population Day - 11-07-2015

உலக மக்கள் தொகை தினம் - 11-07-2015
உலகில் பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்கு குடும்ப நலத்திட்டங்கள், மக்கள் தொகைப் பெருக்கத்தினால் உருவாகும் சமூகப்பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் கருத்தடை முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு 1987 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளினால் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில்(ஜூன்-11), மக்கள் தொகை தினத்தை அனுசரித்துவருகிறது. சீனா, இந்தியா, வங்க தேசம், எத்தியோப்பியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் வேகமாக அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கட்டுப்பாடற்ற மக்கள் தொகை வளர்ச்சியானது, குடிநீர், உணவுப் பற்றாக்குறை, இட நெருக்கடி, சுகாதாரம் இன்மை, வேலையின்மை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. 1840-ஆம் ஆண்டு நூறு கோடியாக இருந்த மக்கள் தொகை, 1927-ஆம் ஆண்டு 200 கோடியாகவும், 1960-ஆம் ஆண்டு 300 கோடியாகவும், 2011-ஆம் ஆண்டு 700 கோடியாக பெருகி தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. எதிர்காலத் தலைமுறையின் நல்வாழ்வினை மனதில் கொண்டு ஒவ்வொரு நாடும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நன்றி :- https://www.facebook.com/yenipathipagam?fref=ts


No comments:

Post a Comment